×

சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து இடஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும்: முதல்வர் எடியூரப்பா தகவல்

பெங்களூரு: மாநிலத்தில் சில வகுப்பினர் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். மாநில முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்ற நாள் முதல் பல வகுப்பினர் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற ேகாரிக்கை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். வீரசைவ பஞ்சமசாலி வகுப்பினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் 2ஏ பிரிவில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். மாநிலத்தில் வாழும் குருபர் வகுப்பினர் தங்களை தாழ்த்தப்பட்ட-பழங்குடியின வகுப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். மேலும், வால்மீகி வகுப்பினர் தங்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், மாதிகா தாண்ேடார வகுப்பினர் உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும், வீரசைவ லிங்காயத்து வகுப்பினர் தங்கள் வகுப்பில் உள்ள உட்பிரிவினருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள்.

அவர்கள் தவிர காணிக, உப்பார, தேவாங்கா, குஞ்சிடிகா உள்ளிட்ட வகுப்பினரும் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடக மாநில குருபர் சங்கத்தின் சார்பில் தங்கள் வகுப்பை பழங்குடியின வகுப்பில் சேர்க்க வலியுறுத்தி கடந்த ஜனவரி 15ம் தேதி காகிநெலேவில் இருந்து பெங்களூரு வரை பாதயாத்திரை நடத்தினர். அதேபோல் வீரசைவ பஞ்சமசாலி வகுப்பினர் மடாதிபதி மிருத்யுஞ்ஜெயா சுவாமி தலைமையில் கடந்த ஜனவரி 14ம் தேதி கூடலசங்கமாவில் பாதயாத்திரை தொடங்கி இன்றுடன் 30 நாளை நெருங்கியுள்ளனர், வால்மீகி வகுப்பினர் நேற்று முன்தினம் தாவணகெேரவில் மாநாடு நடத்தினர்.இப்படி ஒவ்வொரு சாதியை சேர்ந்த தலைவர்கள், மடாதிபதிகள் இட ஒதுக்கீடு பிரச்னையை கையில் எடுத்து முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். சாதிவாரி இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை, மத்திய அரசுக்கு தான் உள்ளது என்று சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல்வர் எடியூரப்பா தெளிவாக தெரிவித்தும், அதை காதில் வாங்கி கொள்ளாமல், ஒவ்வொரு சாதி வகுப்பினரும் தங்கள் ேகாரிக்கையில் உறுதியாக உள்ளனர்.

இந்நிலையில் ெபங்களூரு விதானசவுதாவில் நேற்று செய்தியாளர்களிடம் முதல்வர் எடியூரப்பா கூறும்போது, மாநிலத்தில் ஒவ்வொரு வகுப்பினரும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். நான் அனைத்து வகுப்பை சேர்ந்த மடாதிபதிகளை கேட்டுகொள்வது என்னவெனில், உரிமை கேட்டு நீங்கள் போராட்டம் நடத்துவதை நான் குறை சொல்லவில்லை. போராட்டம் நடத்த வேண்டாம் என்றும் நான் கூறமாட்டேன். வால்மீகி வகுப்பினரின் இட ஒதுக்கீடு உயர்த்துவது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வு குழு அரசிடம் அறிக்கை கொடுத்துள்ளது. இதை பரிசீலனை செய்ய அமைச்சரவை துணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல் மற்ற வகுப்பினரின் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆய்வு குழு அமைக்கப்படும். அதன்பின் மாநில தலைமை செயலாளர் பி.ரவிகுமார், மாநில அரசு தலைமை வக்கீல் பிரபுலிங்க நாவட்கி உள்பட சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். அதுவரை பொறுமை காக்க வேண்டும் என்றார்.

Tags : Eduyurappa ,experts , The reservation will be decided in consultation with legal experts: Chief Eduyurappa informed
× RELATED கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பினால்...