×

கொரோனா சிகிச்சை 4 புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு நான்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாகப்பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் தொற்று நோய் நிபுணர்கள், மயக்கவியல் நிபுணர்கள், நுரையீரல் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தமிழக  அரசின் கோவிட் சிறப்பு நிபுணர் குழு உள்ளிட்ட மருத்துவர்கள் இணைந்து புதிய சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகளை வகுந்துள்ளனர்.வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு நெகட்டிவ் என்று முடிவு வந்தாலும், உடல்வலி, தொண்டைவலி, மூச்சுவிடுதலில் சிரமம், தொடர் காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு, இருமல், நாக்கில் சுவையும், மூக்கில் மணமும் தெரியாமல்  இருந்தால் கொரோனா நோயாளிகளாகவே கருதப்படுவர்கள். இவர்கள் பரிசோதித்து விட்டு ஆர்டிபிசிஆர் முடிவுக்காக காத்திராமல், மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளை உடனடியாக எடுத்துக் கொள்ள ஆரம்பிக்க வேண்டும். அனைத்து  அறிகுறிகள் இருக்கும். எனினும் ஆக்சிஜன் அளவு 96க்கு கீழ் குறைந்து  95 ஆக மாறுபவர்கள் இவர்களுக்கு உடனே சிகிச்சை தேவைப்படுவார்கள். கொரோனா சிகிச்சை மையங்கள், கொரோனா பராமரிப்பு மையங்களில் இருப்போர் ஆக்சிஜன் அளவு 90-94 க்குள் இருப்போர், ஒரு நிமிடத்திற்குள் 24  முதல் 30 முறை மூச்சுவாங்குவோர் இங்கு சிகிச்சை பெற வேண்டும். இப்பிரிவில்  அனுமதிக்கப்படுவோருக்கு  ரத்த தட்டணுக்கள் குறைந்தாலோ அல்லது 90க்கும் கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்தாலோ உடனடியாக மருத்துவமனைகளுக்கு மாற்றும் பணி மேற்கொள்ளப்படும். இந்த வழிகாட்டு  முறைகளைப் பின்பற்றுவதால் இறப்புகளை எந்த அளவிற்கு கட்டுப்படுத்த முடிகிறது என்பதை ஆய்வு செய்த பின் இதை தொடர்வதா ? இல்லையா?  என நிபுணர் குழு மீண்டும் முடிவு செய்யும்.ஆக்சிஜன் 90க்கு கீழ்  இருந்தால் அட்மிட்மருத்துவமனைகளில் சிகிச்சை  தேவைப்படுவோர் 90க்கும் கீழ் ஆக்சிஜன் அளவு குறைந்தவர்கள் ஒரு  நிமிடத்திற்கு 30 முறைக்கு மேல் மூச்சு வாங்குவோர் இங்கு  அனுமதிக்கப்படுவர்.  அவர்களுக்கு ஆக்சிஜன் தெரபி வழங்கி தீவிர   சிகிச்சையளிக்கும் பணியை மருத்துவமனை நிர்வாகங்கள் மேற்கொள்ளும் இந்த ஆணை  14 நாட்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும் என்பது முக்கியமானது என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post கொரோனா சிகிச்சை 4 புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,2-th wave ,Tamil Nadu ,
× RELATED கருவின் பாலினம் அறிவது, அறிவிக்கும்...