கல்லூரி மாணவிகளுக்காக நவீன பஸ் நிழற்குடை: திமுக எம்எல்ஏ திறந்து வைத்தார்

காஞ்சிபுரம்: கல்லூரி மாணவிகளின் கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் புதிய நவீன பஸ் நிழற்குடையை திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் திறந்து வைத்தார். சின்ன காஞ்சிபுரம் பகுதியில் செயல்படும் பச்சையப்பன் மகளிர் கல்லூரி அருகே கல்லூரி மாணவிகள் செல்வதற்காக பஸ் நிறுத்தம் உள்ளது. காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவிகள் பஸ்களில் வந்து செல்லும் நிலையில், அந்த நிறுத்தத்தில் நிழற்குடை இல்லை. இதனால், வெயில் காலங்களிலும், மழைக் காலங்களிலும், மாணவிகள் கடும் அவதியடைகின்றனர். இதையொட்டி, அப்பகுதியில் பஸ் நிழற்குடை அமைக்க காஞ்சிபுரம் எம்எல்ஏ வக்கீல் எழிலரசனிடம் கல்லூரி மாணவிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.9.5 லட்சத்தில, பஸ் நிழற்குடை அமைக்க உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து மின்விளக்குகள், மின்விசிறிகள், நாற்காலிகள் என கல்லூரி மாணவிகள் அமர்ந்து காத்திருந்து பஸ்சில் ஏறிச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன வசதிகளுடன் பஸ் நிழல்குடையை எம்எல்ஏ எழிலரசன் நேற்று திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் திமுக மாவட்ட அவைத்தலைவர் சேகரன், நகர செயலாளர் சன்பிராண்டு ஆறுமுகம், அவைத்தலைவர் சந்துரு, துணை செயலாளர்கள் கருணாநிதி, ஜெகநாதன், பொருளாளர் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர், எஸ்கேபி.சீனுவாசன், வட்ட செயலாளர் சங்கர், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, பொறியாளர் ஆனந்த ஜோதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: