×

அரியனூர் ஊராட்சியில் மினி கிளினிக் திறப்பு

செய்யூர்: அரியனூர் ஊராட்சியில் தமிழக அரசின், ‘மினி கிளினிக்’ அமைக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. தமிழக அரசு சார்பில், தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் 2 ஆயிரம் மினி கிளினிக் தொடங்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில், பெரும்பாலான பகுதியில் மினி கிளினிக் அமைக்கும் பணி நிறைவடைந்து திறக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியம் அரியனூர் ஊராட்சியில் மினி கிளினிக் அமைக்கும் பணி நிறைவடைந்து, அதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், அரியனூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நோயாளிகள் இங்கு வந்து சிகிச்சை பெற்றனர்.

Tags : clinic , Opening of a mini clinic in Ariyanur panchayat
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை...