×

வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்

டாக்கா: வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, டாக்காவில் இன்று தொடங்குகிறது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ்  ஒருநாள், டெஸ்ட் தொட ர்களில் விளையாடி வருகிறது. அறிமுக வீரர்களுடன் களம் கண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 0-3 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் பரிதாபமாக தோற்றது. அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. சாட்டோகிராமில் நடந்த முதல் டெஸ்டில், அறிமுக வீரர்  கைல் மேயர்ஸ் அடித்த அதிரடி இரட்டை சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது.

அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் டாக்காவில் இன்று தொடங்குகிறது. ஒருநாள் தொடரை முழுமையாக இழந்த நிலையில், டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது. அதே சமயம், முன்னணி வீரர்கள் ஷாகிப் அல் ஹசன், ஷத்மன் இஸ்லாம் காயமடைந்துள்ளது வங்கதேச அணிக்கு பின்னடைவை கொடுத்துள்ளது. அதை சமாளிக்கும் வகையில் நிறைய மாற்றங்களுடன் மோமினுல் ஹக் தலைமையிலான வங்கதேசம் களம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடரை வெல்ல வெஸ்ட் இண்டீசும், சமன் செய்ய வங்கதேசமும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

Tags : Bangladesh ,West Indies ,2nd Test , Bangladesh - West Indies 2nd Test starts today
× RELATED டி20 உலகக்கோப்பை 2024: தான் தேர்வு செய்த...