×

பி.எஸ்.என்.எல்.க்கு 4ஜி தொழில்நுட்பம் வழங்காததால் பாதிப்பு: தயாநிதிமாறன் பேச்சு

டெல்லி: பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.க்கு 4 ஜி தொழில்நுட்பத்தை கூட இதுவரை வழங்காததால் அந்நிறுவனம் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தயாநிதிமாறன் எம்.பி பேசியுள்ளார். தனியார் செல்போன் சேவை நிறுவனங்களுக்கு 5ஜி தொழில்நுட்பத்தை வழங்க முன்வந்துள்ளது மத்திய அரசு. மக்களின் நம்பிக்கையை பெற்ற காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி.யை தனியார் மயமாக்குவதற்கும் தயாநிதிமாறன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் வெளிநாடுகளில் சிக்கி தவித்த ஏராளமான இந்தியர்கள் ஏர்இந்தியா விமானங்கள் தான் அழைத்து வந்தன.

இந்திய அரசு விற்க நினைக்கும் ஏர் இந்தியா நிறுவனம் தான் கொரோனா காலத்தில் அரசுக்கு உதவியாக இருந்தது. ஜி.எஸ்.டி மூலம் சாமானிய மக்கள் சக்கையாக பிழிந்தெடுக்கப்படுகிறார்கள் என்று தயாநிதிமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் பல ஆயிரம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் முடங்கின என்று தயாநிதி மாறன் பேசியுள்ளார். பல்வேறு சிறு, குறு தொழில்களை நம்பி இருந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். கொரோனா காலத்தில் இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் சொத்து 33%க்கு மேல் அதிகரித்துள்ளது. பணக்காரர்கள் மீது வரி விதித்து ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதுதான் அறிஞர் அண்ணா காட்டிய பொருளாதாரம் என்று தயாநிதிமாறன் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசோ ஏழைகள் மீது வரி விதித்து பணக்காரர்களுக்கு சலுகை வழங்குவதாக தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags : BSNL , Dayanidhi Maran
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...