களக்காடு அருகே உயிர்பலி வாங்க துடிக்கும் மின் கம்பங்கள்

களக்காடு: களக்காடு அருகே உள்ள நடுகல்லடி சிதம்பராபுரம் கீழ தெருவில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளை கடந்து விட்டது. இதனால் மின் கம்பங்கள் மிகவும் பழுதடைந்து காட்சி அளிக்கிறது. கம்பங்களின் அடிப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டு, கம்பிகள் வெளியே தெரியும் வகையில் காணப்படுகிறது. இந்த மின் கம்பங்கள் எந்த நேரத்திலும் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயகரமான சூழல் நிலவுவதாக அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர். அந்த பகுதி பொதுமக்கள் மின் கம்பங்களை கடந்து செல்லும் போது அச்சத்துடனே செல்வதாகவும் கூறுகின்றனர்.

இதுபற்றி மின் வாரியத்திற்கு பலமுறை புகார் அளிக்கப்பட்டும், மின் கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே மின் கம்பங்கள் கீழே விழுந்து உயிர்பலி ஏற்படும் முன் இரு மின் கம்பங்களையும் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>