×

9-ம் கட்ட பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு: லடாக்கில் இந்திய-சீன எல்லையில் பாங்காய் ஏரிக்கரையில் இருந்து இருநாட்டு படைகளும் விலகல்.!!!

காஷ்மீர்: கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த வருடம் 2020-ம் ஆண்டு மே மாதம் சீன ராணுவம் ஊருடுவ முயற்சி செய்தது. இதை இந்திய ராணுவம் தடுத்தது. இதனால் இரு ராணுவ வீரர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆபத்தான ஆயுதங்களை கொண்ட சீன வீரர்கள் தாக்கியதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் பலியாகினர். சீன தரப்பில் 35க்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்பட்டாலும் சீன ராணுவம் ஆதாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.

அப்போதிலிருந்தே லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. அங்கு இரு நாட்டு ராணுவமும் தலா 50 ஆயிரம் வீரர்களை எல்லையில் குவித்து வைத்துள்ளது. பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக இருநாட்டு ராணுவ அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. தொடர்ந்து, லடாக் எல்லையில் படைகள் வாபஸ் பெறுவது தொடர்பாக இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையேயான 9ம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 24ம் தேதி காலை 10.30 மணி அளவில் சீனாவின் மோல்டோ எல்லைப் பகுதியில் தொடங்கி சுமார் 16 மணிநேரம் நடந்தது.

அடுத்தநாள் 25-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பேச்சுவார்த்தை முடிந்தது. மோதல் நடந்த பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது, லடாக் எல்லையில் சுமூக நிலையை ஏற்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் பேசியதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், லடாக்கில் இந்திய-சீன எல்லையில் பாங்காய் ஏரிக்கரையில் இருந்து இருநாட்டு படைகளையும் விலக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக பாங்காங் ஏரியின் வடக்கு கரையில் இருந்து இருநாட்டு படைகளும் விலக்கப்படுகின்றன. பாங்காங் ஏரியின் தென்கரையில் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ டாங்குகளும் திரும்பப்பெறப்படுகின்றன. பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருநாடுகளும் படைகளை விலக்கிக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : phase ,withdrawal ,negotiations ,Lake Bangkok ,Indo ,Ladakh ,border ,Chinese , Phase 9 of the talks concludes smoothly: Bilateral forces withdraw from Lake Bangkok on the Indo-Chinese border in Ladakh !!!
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...