இந்தியா - சீனா 9-ம் கட்ட ராணுவ பேச்சுவார்த்தை: பங்கோங் சோ ஏரி கரையில் படைகளை இருநாடுகளும் திரும்பப் பெறப்பட்டதாக தகவல்

டெல்லி: இந்தியா - சீனா 9-ம் கட்ட ராணுவ பேச்சுவார்த்தை அடிப்படையில் பங்கோங் சோ ஏரி கரையில் உள்ள படைகளை இருநாடுகளும் திரும்பப் பெறப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பதாவது சுற்று இராணுவத் தளபதி மட்ட பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட ஒருமித்த கருத்துப்படி புதன்கிழமை திட்டமிட்டபடி பங்கோங் ஏரியின் தெற்கு மற்றும் வடக்கு கரையில் உள்ள சீன மற்றும் இந்திய எல்லைப் படைகள் பணிநீக்கம் செய்யத் தொடங்கியதாக சீன ஊடகங்கள் மேற்கோளிட்டுள்ளன. இந்தியா- சீனா ராணுவ தளபதிகள் இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. கால்வன் பள்ளத்தாக்கில் சீனா கடந்த ஆண்டு மே மாதம் ஊடுருவ முயன்றது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

சீனா தரப்பில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதனால் இருநாடுகளிடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து இரு நாட்டின் ராணுவம், வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுவரை 8 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் எந்த பேச்சுவார்த்தைலும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது. ஜனவரி மாதம் நடைபெற்ற 9-ம் கட்ட பேச்சுவார்த்தையில் தான் முடிவு எடுக்கப்பட்டது. எல்லையில் சீனா ராணுவ வீரர்கள் எண்ணிக்கையை குறைக்காத வரையில் இந்தியாவும் படை குறைப்பை மேற்கொள்ளாது என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஏற்கனவே கூறியிருந்தார்.

Related Stories:

>