பிரதோஷ வழிபாட்டில் தரிசனம் செய்த பசு

செய்யாறு:செய்யாறு நந்தீஸ்வரர் கோயிலில் நேற்று நடந்த பிரதோஷ வழிபாட்டில் பசு ஒன்றும் கலந்து கொண்டதால் பக்தர்கள் பரசவம் அடைந்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் கிரிதரன்பேட்டையில் தையல்நாயகி உடனுறை நந்தீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர். அப்போது, அவ்வழியாக சென்ற பசு மாடு ஒன்று திடீரென பக்தர்களுடன் வந்து சுவாமி சன்னதி முன்பு நின்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தபோது, பசுவும் நீண்ட நேரம் பக்தர்களுடன் கூடவே நின்று கொண்டிருந்தது. இதனால் பசுவும் சுவாமி தரிசனம் செய்வதாக நினைத்து பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

Related Stories:

>