ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 250-க்கும் மேற்பட்டோர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.!!!

சென்னை: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் 250-க்கும் மேற்பட்டோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்துள்ளனர். இது தொடர்பாக திமுக வெளியிட்ட பத்திரிக்கை செய்தியில், கழகத் தலைவர் அவர்கள் முன்னிலையில் இன்று (10.2.2021), காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், மாநில விவசாய அணி துணைத் தலைவர் தே.மதியழகன்  - கழக சிறுபான்மை நலஉரிமை பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் ஏற்பாட்டில், ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த தூத்துக்குடி  மாவட்டம், மாவட்ட இளைஞர் அணி வேல்முருகன் தலைமையில் மாவட்ட மகளிர் அணி ஐஸ்வர்யா, தெற்கு மண்டல செயலாளர் சங்கர்,

தெற்கு மண்டல இளைஞர் அணிச் செயலாளர் பகலவன், கோவில்பட்டி ஒன்றியச் செயலாளர் முருகன், நாட்டமுத்து கிளைச் செயலாளர் காளிராஜ், நாட்டமுத்து இணைச் செயலாளர் முனியசாமி, நாட்டமுத்து துணைச் செயலாளர் வேல்முருகன், நாட்டமுத்து துணைச் செயலாளர் கணேசன், கோவில்பட்டி ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் எம். முருகேஸ்வரி, கோவில்பட்டி ஒன்றிய மகளிர் அணி இணைச் செயலாளர் செல்வி, கோவில்பட்டி ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலாளர் முத்துமாரி,  கோவில்பட்டி மகளிர் அணி துணைச் செயலாளர் முனீஸ்வரி, கோவில்பட்டி மகளிர் அணி துணைச் செயலாளர் அன்னலட்சுமி, செயற்குழு உறுப்பினர் ஆவுடைசெல்வி, மஞ்சள்தோப்பு கிளை மகளிர் அணிச் செயலாளர் ஈஸ்வரி, மஞ்சள்தோப்பு கிளை மகளிர் அணி இணைச் செயலாளர் பரமேஸ்வரி, செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமி, அக்ஷிதா, இசக்கியம்மாள்  உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்களும்;

 கன்னியாகுமரி மாவட்டம், மாவட்ட இணைச் செயலாளர் எஸ். வஹாப் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் ஜோசப் பெலிக்ஸ் ராய், மாவட்ட மீனவர் அணி செயலாளர் எ. ஆன்றனி, மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் ரவீன் மரிய ஹென்றி, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் மெர்லின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டேவி ராஜ், நாகர்கோவில் மாநகர துணைச் செயலாளர் மிக்கேல் ராஜா,  ஒன்றிய துணைச் செயலாளர் ஜாக்சன் கல்யாணசுந்தரம், கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் சுபா ராஜேஷ்குமார், கிள்ளியூர் ஒன்றிய துணைச் செயலாளர் ஜாண்சன், முன்சிறை ஒன்றிய துணைச் செயலாளர் வினஸ்,

அகஸ்தீஸ்வரம் ஒன்றிய துணைச் செயலாளர் ரூபன் சிங் சேவியர், தோவாளை ஒன்றிய செயற்குழு உறுப்பினர் மகேஷ் காந்த், குருந்தன்கோடு ஒன்றிய செயற்குழு உறுபபினர் சி. ராஜா மணி, களியக்காவிளை பேரூர் செயலாளர் கோபால கிருஷ்ணன், வில்லுக்குறி பேரூர் துணைச் செயலாளர் எம். நாகராஜன், வில்லுக்குறி பேரர் 9வது வார்டு செயலாளர் வி. ரவிக்குமார், வில்லுக்குறி பேரூர் 10வது வார்டு செயலாளர் வேதகண், வார்டு செயலாளர் பாபா மணி, ரஜினிகாந்த் பேரவை துணைச் செயலாளர் என் ராஜாசிங் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்களும் என 250க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

 அதுபோது முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, எம்.பி. இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் என். சுரேஷ்ராஜன், எம்.எல்.ஏ., கழக சிறுபான்மை நலஉரிமை பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜோசப் ஸ்டாலின், மாநில விவசாய அணி துணைத் தலைவர் தே.மதியழகன், ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>