அதிக வட்டிக்கு கடன் வழங்கி மிரட்டல் விடுத்தாக தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்று கடன் செயலிகள் மீது வழக்கு பதிவு

தஞ்சை: அதிக வட்டிக்கு கடன் வழங்கி மிரட்டல் விடுத்தாக தஞ்சை மாவட்டம் திருவையாறு காவல் நிலையத்தில் 3 கடன் செயலிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த இரண்டு செயலிகள், டெல்லியை சேர்ந்த ஒரு செயலி என மொத்தம் மூன்று செயலிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருவையாறைச் சேர்ந்த வழக்கறிஞர் விவேக் வழக்கு தொடர்ந்த நிலையில், போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளனர். கடன் கொடுப்பதற்கு முன், பேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலை எடுத்து வைத்து மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது.

நடவடிக்கை சீன செயலிகளை பயன்படுத்தி அதிக வட்டிக்கு கடன் கொடுத்து, அதன் மூலம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை எடுத்து மிரட்டியதாக கடந்த ஜனவரி 2 ஆம் தேதி சென்னையில் 2 சீனர்கள் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கும்பல், வாடிக்கையாளர்களிடம் அதிக வட்டிக்கு கடன் வழங்குவதாக கூறி, சீன செயலிகள் மூலம் அவர்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரித்துள்ளனர். இதில் கடனை திருப்பி செலுத்தாத நபர்களின் நண்பர்களை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட நபர் குறித்து அவதூறாக பேசியுள்ளனர்.

Related Stories:

>