ஐயர்பாடியில் காட்டு யானைகள் உலா

வால்பாறை : வால்பாறையை அடுத்து ஐயர்பாடி எஸ்டேட்-கருமலை எஸ்டேட் வழியில் காட்டு யானைகள் உலா வருகிறது. நேற்று மாலை அப்பகுதியில் காட்டு யானைகள் தேயிலைத்தோட்டங்களில் வலம் வந்ததால் பரபரப்பு நிலவியது. 8க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள சிற்றோடை பகுதியில் முகாமிட்டு உணவு உட்கொண்டு வருகிறது. வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Stories: