×

திமுகவிற்கு படையெடுக்கும் ரஜினி ரசிகர்கள் :ஆளுங்கட்சி வயிற்றில் ‘அல்லு

தேனி : நடிகர் ரஜினி தான் அரசியலுக்கு வரவில்லை எனக்கூறி விட்டார். ரஜினி வருவார் என காத்திருந்து ஏமாந்த ரசிகர்களில் பெரும்பாலானோர் பிற அரசியல் கட்சிகளுக்கு செல்கின்றனர். பெரும்பாலான ரசிகர்கள் திமுகவில் சேரவே முயற்சிக்கின்றனர். பல இடங்களில் திமுகவில் சேர்ந்து வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் இருந்து மாவட்டத்தில் உள்ள முக்கிய ரசிகர்களுக்கு அலைபேசி மூலம் போன் அழைப்பு வந்துள்ளது. நீங்கள் அவசரப்பட வேண்டாம். ரஜினி ரசிகர்களாகவே இருங்கள். வேறு அரசியல் கட்சிகளில் அவசரப்பட்டு சேர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

எதிர்முனையில் பேசுபவர், தான் ரஜினி மன்ற நிர்வாகி, தலைமை அலுவலகத்தில் இருந்து பேசுகிறேன் என்று மட்டும் கூறி வருகிறார். இதனால் குழப்பம் அடைந்துள்ள ரசிகர்கள் நம்முடன் போனில் பேசுவது யார்? ரஜினி அரசியலுக்கு வரவில்லை என தெளிவாக சொன்ன பிறகும், நம்மை ஏன் கட்டிப்போட முயற்சிக்கின்றனர். நம்மை வேறு கட்சிகளில் சேர விடாமல் தடுப்பது யார்? என பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

இதுகுறித்து ரசிகர்கள் கூறியதாவது:எங்களுக்கு ஆளும் கட்சி மீது தான் சந்தேகம் உள்ளது. ரஜினியே எங்களை பிற இயக்கங்களில் சேர்ந்து அரசியல் பணிகளை தொடரலாம் என கூறி விட்டார். பெரும்பாலான ரசிகர்கள் திமுகவில் சேர்ந்து வருகின்றனர். இதனை தடுக்க அதிமுக தரப்பில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பேசுவது போல் யாரோ நம்பர்களை சேகரித்து பேசி வருகின்றனர் என்றனர்.

Tags : fans ,Rajini ,DMK ,Allu ,party , ரஜினி ரசிகர்கள்
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...