×

ஊட்டியில் மீண்டும் உறைபனி கொட்டியது-வெண்மையாக காட்சியளித்த புல்வெளிகள்

ஊட்டி : ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று உறைப்பனி கொட்டியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை உறைப்பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். ஆனால், இ்ம்முறை கடந்த மாதம் வரை உறைப்பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.

பெரும்பாலான நாட்கள் சாரல் மழையே பெய்தது. கடந்த மாதம் 15ம் தேதிக்கு பின்னரே பனியின் தாக்கம் அதிகரித்தது. கடந்த இரு வாரங்களாக அவ்வப்போது ஊட்டியில் உறைப்பனி பொழிவு காணப்படுகிறது. குறிப்பாக, காந்தல், பிங்கர்போஸ்ட், தலைகுந்தா, எச்பிஎப்., ஊட்டி நகரம் போன்ற பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.

நேற்று முன்தினம் இரவும் ஊட்டியில் கடும் உறைப்பனி காணப்பட்டது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் உள்ள காய்கறி தோட்டங்கள் மற்றும் புல்வெளிகள் உறைப்பனியால் வெண்மை நிறத்தில் காட்சியளித்தது. உறைப்பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், குளிரும் அதிகரித்துள்ளது.
பகல் நேரங்களில் கடும் வெயிலும், அதற்கு நேர் மாறாக இரவு நேரங்களில் கடும் குளிரும் நிலவுகிறது. நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது.

Tags : Frost ,meadows , Ooty: The public in Ooty and surrounding areas suffered due to frost yesterday.
× RELATED நீலகிரிக்கு உறைபனி எச்சரிக்கை.....