சென்னை- மதுரை இடையேயான தேஜஸ் விரைவு ரயில் ஏப்ரல் முதல் திண்டுக்கலில் நின்று செல்லும்: ரயில்வே நிர்வாகம்

டெல்லி: சென்னை- மதுரை இடையேயான தேஜஸ் விரைவு ரயில் ஏப்ரல் முதல் திண்டுக்கலில் நின்று செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கலில் தேஜஸ் விரைவு ரயில் நிறுத்தப்பட வேண்டும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் வலியுறுத்தியிருந்தார். சென்னை மதுரை இடையேயான தேஜஸ் விரைவு ரயில், திண்டுக்கலில் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடிதம் கடந்த 19 ஆம் தேதி கிடைக்கப்பெற்றது. அந்த கோரிக்கையின்படி, வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியிலிருந்து, அடுத்த ஆறு மாதத்திற்கு தேஜஸ் ரயில் திண்டுக்கலில் நிறுத்தப்படும் என கூறியுள்ளது.

ரயில்வே நிர்வாகத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் தேஜஸ் ரயில் திண்டுக்கலில் நிறுத்தப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன், எனது கோரிக்கையை ஏற்று ஏப்ரல் மாதம் முதல் திண்டுக்கலில் நிறுத்தப்படும் என அறிவித்த ரயில்வே நிர்வாகத்துக்கு நன்றி என ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: