பழநி கோயிலில் ₹2.82 கோடி காணிக்கை

பழநி : திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 20 நாட்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் நேற்று துவங்கியது. வங்கி ஊழியர்கள், கோயில் அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் ரொக்க பணமாக ரூ.2 கோடியே 82 லட்சத்து 14 ஆயிரத்து 370 கிடைத்தது. தங்கம் 910 கிராம், வெள்ளி 17,840 கிராம், வெளிநாட்டு கரன்சி 57 ஆகியவை இருந்தன. உண்டியல் எண்ணும் பணியை பழநி கோயில் செயல் அலுவலர் கிராந்திகுமார் பாடி, துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கண்காணித்தனர். இரண்டாவது நாளாக இன்றும் உண்டியல் எண்ணிக்கை நடைபெறுகிறது.

Related Stories:

>