குடும்பத் தகராறில் குழந்தைகளை தீ வைத்து கொன்று தாய் தற்கொலை-மதுரை அருகே சோகம்

வாடிப்பட்டி : மதுரை அருகே குடும்ப தகராறில் குழந்தைகளை தீவைத்து கொன்று தாயும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே பரவை மேலவெளி வீதியை சேர்ந்தவர் வேல்முருகன். ேலாடுமேன். இவருக்கும் திருமங்கலம், கல்லணை கிராமத்தை சேர்ந்த கார்த்திகைசெல்விக்கும் (25) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ராக்காயி என்ற கவிதர்ஷினி (3), தங்கேஸ்வரன் (2) என்ற குழந்தைகள் உள்ளனர். தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன்பின் வேல்முருகன் வேலைக்கு சென்று விட்டார். மனமுடைந்து காணப்பட்ட கார்த்திகைசெல்வி வீட்டில் தனது 2 குழந்தைகள் மீதும், தன் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் குழந்தைகள் இருவரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாகினர்.

கார்த்திகைசெல்வி படுகாயத்துடன் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் ஆர்டிஓ விசாரணையும் நடக்க உள்ளது.

குடும்ப பிரச்னையால் தனது 2 குழந்தைகளையும் தீ வைத்து கொலை செய்து விட்டு, தாயும் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>