×

குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப் போகிறது; குட்கா விற்பனை முழுமையாகத் தடை செய்யப்படும்: ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை அதிக அளவில் நடப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் ஜனநாயக உரிமையின் அடிப்படையில் குட்கா பொட்டலங்களைச் சட்டசபைக்குக் கொண்டு சென்று காண்பித்தோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை அளித்தார். கமிஷன் வாங்கிக் கொண்டு அதன் விற்பனைக்குப் பச்சைக்கொடி காட்டியவர்களுக்குப் பொறுக்கவில்லை என குற்றம் சாட்டினார். சட்டமன்ற உறுப்பினர்களுக்கான உரிமையையே பறிக்க நினைத்தார்கள் என கூறினார்.


முதல் முறையே இந்த நடவடிக்கைக்குத் தடை போட்டது உயர்நீதிமன்றம் என தெரிவித்தார். அடங்காமல் மறுபடியும் நோட்டீஸ் அனுப்பினார்கள். அதையும் இன்று ரத்து செய்துவிட்டது உயர்நீதிமன்றம் என தெரிவித்தார். இந்த வேகத்தை குட்கா விற்பனையைத் தடுப்பதில் காட்டி இருக்கலாம் என விமர்சனம் செய்தார். இன்னும் விற்பனை தொடருவதாகவே சொல்கிறார்கள். குட்கா அரசின் ஆட்டம் விரைவில் முடியப் போகிறது என கூறினார். குட்கா விற்பனை முழுமையாகத் தடை செய்யப்படும் என உறுதி அளித்தார்.

Tags : game ,kingdom ,Stalin , Gutka's government, the game, soon, could, Stalin, sure
× RELATED ரம்மி விளையாட்டில் ரூ.30 ஆயிரம் இழப்பு போலீஸ்காரர் தற்கொலை