×

பெரம்பலூரில் ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் புதர் மண்டி கிடக்கும் அவலம்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

*இது உங்க ஏரியா

பெரம்பலூர் : பெரம்பலூரில் கடந்த 2012ம் ஆண்டு பேருந்துகள் செல்லும் சாலையோரம் சிறுவர், சிறுமியர் ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சி பெறுவதை பார்த்து அப்போதைய கலெக்டர் விஜயக்குமார் பரிந்துரை செய்து, தமிழ்நாட்டில், தலைநகர் சென்னைக்கு அடுத்தபடியாக, பெரம்பலூரில் அரசு சார்பாக ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் அமைக்க ஏற்பாடு செய்தார். அவரால் தொடங்கப்பட்டும், ரூ1கோ டிக்குமேல் செலவு அதிகரித்ததால் அவருக்குப்பிறகு தரைத்தளம் கான்கிரீட் போடாமலேயே நிதிப்பற்றாக்குறையால் 14 மாதங்கள் கட்டுமான பணிகள் நடக்காமல் நின்று போய்க்கிடந்தன.

 பிறகு 2016ல் கலெக்டர் நந்தகுமார் மாவ ட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்டத்தின் நிதியை வாங்கிக் கொடுத்து, கட்டுமான பணிகளை முடித்து ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். தற்போது பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத் தின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில் 2018-19ல் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

இந்நிலையில் கடந்த 10 மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக விளையாட் டு மைதானங்களை மூட உத்தரவிடப்பட்டதால் ஆட்களே நுழையாத மைதானமாக மாறிப்போனது. இதனால் அரசுத்துறையினரால் பராமரிக்கப்படாமல் அம்போவெனவிடப்பட்டு, தற்போது ஆள் உயரத்திற்கு மரங்களும், செடிகளும் மைதானத்தின் உள்ளேயே முளைத்து புதிய தோப்பு போல மாறிவிட்டது. புதர் மண்டிக்கிடக்கும் ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில் சிறுவர்,சிறுமியருக்கு தற்போது பயிற்சியை தொடங்கி உள்ளது.

புதர்கள் மைதானத்தின் நடுவிலேயே முளைத்துக் கிடப்பதால் சறுக்கி விளையாடும் சிறுவர்கள் அச்சத்துடன் விளையாடி வருகின்றனர்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக அரசால் அமைக்கப்பட்ட ரோலர் ஸ்கேட்டிங் மைதானம் என்ற சிறப்போடு மட்டுமன்றி, நிதிப்பற்ற குறையால் பணி கள் 14மாதம் நின்றுபோய், விளையாட்டுத் துறையே செய்வதறியாமல் வேடிக்கை பார்த்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : bush mandi ,Perambalur , Perambalur: In Perambalur, in the year 2012, roadside boys and girls were seen training in roller skating.
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை