×

தலைமை செயலகம் அருகே அடர் காடுகள் உருவாக்கும் திட்டம் தொடக்கம்: ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: சென்னையில் தலைமைச் செயலகம் அருகே அடர் காடுகள் உருவாக்கும் திட்டம் தொடங்கியது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்தார். இந்த பூங்காவனது தலைமைச் செயலகத்தில் எதிர்புறம் அமைந்துள்ளது என கூறினார்.  2000 நாட்டு மரக்கன்றுகள் மேல் இங்கு நடப்பட்டு நன்றாக வளர்ந்து உள்ளது என கூறினார். இதே போல் பல்வேறு இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்படும் என கூறினார். தற்போது வரை 32 மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டுள்ளன என கூறினார். பல்லுயிர் பெருக்கம், மழைநீர் சேகரிப்பு, பசுமைக்கு மியாவாக்கி காடுகள் அவசியம் என கூறினார். சென்னை மாநகராட்சியின் பல்வேறு முயற்சிகளில் ஒரு முயற்சியே மியாவாக்கி காடுகள் திட்டம் என கூறினார்.

சென்னையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். சென்னையில் தற்போது முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது என கூறினார். மாநகராட்சி சம்பந்தப்பட்ட அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என கூறினார். இதுவரை 26 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தடுப்பூசி வெலுத்தப்பட்டு உள்ளது என கூறினார். மேலும் கொரோனா தடுப்பூசி குறித்து எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படவில்லை என கூறினார். ஒரு நாளுக்கு 5000 நபர்களுக்கு மேலாக கொரோனா தடுப்பூசி செலுத்தற்கான பணி நடைபெற்று வருகிறது என கூறினார்.


Tags : Launch ,Prakash ,General Secretariat , General Secretariat, Dense Forests, Project, Prakash
× RELATED தினமும் காலையில் எழுந்தவுடன் 100...