×

பீகாரில் 20 அமைச்சர்கள் பதவியேற்பு

பாட்னா:  பீகாரில் முதல்வர் நிதிஷ் தலைமையிலான அமைச்சரவையில் நேற்று புதிதாக 20 அமைச்சர்கள் பதவியேற்றனர். பீகாரில் பாஜ - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஐக்கிய ஜனதா தள தலைவரான நிதிஷ் குமார் முதல்வராக இருக்கிறார். நிதிஷ் பதவியேற்றபோது அவருடன் 14 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றனர். இம்மாநில சட்டப்பேரவை பலத்தின்படி, 36 அமைச்சர்கள் நியமிக்கப்படலாம். எனவே, அமைச்சரவை விரிவாக்கம் பற்றி பாஜ - ஐஜத இடையே பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அதில் முடிவு எட்டப்பட்டதை தொடர்ந்து, நேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், 20 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர்.

இதில், பாஜ. சார்பில் 9 பேரும், ஐஜத சார்பில் 8 அமைச்சர்களும், இதர கூட்டணி கட்சிகளின் சார்பில் 2 பேரும் பதவியேற்றனர். இதன் மூலம், அமைச்சரவையின் மொத்த பலம் 34 ஆக உயர்ந்துள்ளது. இதில், பாஜ தேசிய செய்தி தொடர்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சையத் ஷானவாஸ் உசேனும் அமைச்சராக பதவியேற்றார். இவர் கடந்த மாதம்தான் திடீரென இம்மாநில சட்டமேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

Tags : ministers ,Bihar , 20 ministers take office in Bihar
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...