×

கலப்பு மருத்துவ முறையை ரத்து செய்யக்கோரி மருத்துவ சங்கத்தினர் உண்ணாவிரதம்

திருவள்ளூர்: கலப்பு மருத்துவ முறையை ரத்து செய்யக்கோரி இந்திய மருத்துவ சங்கம் திருவள்ளூர் கிளை சார்பில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை விழிப்புணர்வு பைக் பேரணி மற்றும் அரசு மருத்துவமனையில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில், திருவள்ளூர் மாவட்ட இந்திய மருத்துவ சங்கத்தின் திருவள்ளூர் கிளையின் சார்பில் மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மேலும், இந்திய மருத்துவ சங்க திருவள்ளூர் கிளை செயலாளர் விஜயராஜ், பொருளாளர் பிரேம்குமார், இந்திய குழந்தைகள் நல சங்க தலைவர் ஜெகதீசன், செயலாளர் பிரபுசங்கர், பொருளாளர் கிஷோர்குமார், இந்திய பல் மருத்துவர் சங்க தலைவர் ராஜசேகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர். இதில், ஆயுர்வேத,  சித்தா, யுனானி என தனித்தனி துறையிலும் பட்டம் பெற்றவர்கள் அந்த அந்த  துறையில் உள்ள மருத்துவத்தை மட்டுமே செய்ய வேண்டும். கலப்பு மருத்துவ  முறையை ரத்து செய்யவேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.


Tags : associations , Medical associations are fasting to demand the abolition of mixed medicine
× RELATED 1.73 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை...