×

பல்வேறு விதமான மொழி பேசும் மக்கள் வாழும் நாட்டில் ஒரே நாடு, ஒரே மொழி என்பது சரிவராது: பேராசிரியர் பர்வீன் சுல்தானா

மாநில சுயாட்சி உரிமை என்று மாநிலங்களுக்கு உண்டு. அதை மாநிலங்கள் முன்னெடுக்க வேண்டும். தமிழகம் சார்பில் நம்முடைய பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விஷயங்களை கடுமையாக ரொம்ப கடுமையாக பேச வேண்டும். அதிமுக, திமுக போன்ற இயக்கங்கள் பேசினால் கூட மற்ற இயக்கங்களின் உறுப்பினர்கள் மவுனம் சாதிப்பது பின்னடைவை ஏற்படுத்தும். உரிமைகளில் பின்னடைவை ஏற்படுத்தும். அனைத்து கட்களின் உறுப்பினர்களும் நமது உரிமைகளை முன்னெடுத்து பேச வேண்டும். இந்த மொழி திணிப்பு என்பது இன்று, நேற்று நடக்கவில்லை. பன்னெடுங்காலமாக நடந்து கொண்டிருக்கிது.

இந்த மொழி திணிப்பை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடந்தது. ஆனால், 1965ல் தமிழகத்தில் நடந்த போராட்டம் மிகவும் முக்கியமான போராட்டம். அந்த போராட்டத்தில் நிறைய பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு மொழி போர் தியாகிகள் என்றே பெயர். அவர்கள் எதற்காக, மொழியை தூக்கி பிடித்தனர் என்பதற்கான வரலாறு நம்முடைய பாடத்திட்டங்களிலும் நாம் சொல்லியே ஆக வேண்டும். குறிப்பிட்ட வரலாற்று பதிவு என்னவென்றால் மொழிவாரியாக தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இத்தனை மொழி பேசும் மக்கள் குழுமி இருக்க கூடிய இடத்தை ஒரு மாநிலமாக அங்கீகரித்தனர். சுதந்திரத்திற்கு முன்னர் 57 நாடுகளாக நமது நாடு பிரிந்து இருந்தது.

ஒரு துணை கண்டம் தான். இது பல்வேறு விதமான மொழி பேசும் கலாச்சாரம் கொண்ட மக்கள் சேர்ந்து இருக்கின்றனர். இதில், நமக்கான தனித்துவம் என்பது மொழி. அதில் பிற மொழி பேசுபவர்கள் நமது வீட்டிற்கு விருந்தாளியாக வரலாம். ஆனால், நமது வீட்டில் உரிமை கொண்டாட முடியாது. அது நான் கொடுக்கிற இடம் தான். இது ஜனநாயக உரிமை. இதுதான் மாநிலங்களின் உரிமை. நாடு ஒன்று என்பதற்காக ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே மொழி என்பது இந்த நாட்டுக்கு சரிவராது. இந்த நாட்டை அப்படி செய்தால் ஜனநாயகத்தை மறுப்பதாக அர்த்தம். இது உரிமை அடிப்படையில் மொழி என்பது நமக்கான தமிழ்மொழிகள். நமக்கான எல்லா செய்திகள் நமக்கான மொழியில் செய்யப்பட வேண்டும் என்பது நமக்கான உரிமை. இது தேசத்துக்கு எதிரான வார்த்தை அல்ல.

மனித உரிமைக்கு உட்பட்ட வார்த்தை, மாநில சுயாட்சிக்கு உட்பட்ட வார்த்தை. நம்முடைய மொழியில் நமக்கான விஷயங்கள் புரிந்துணர்வில் கொண்டு வர வேண்டும். நான் இப்போது அவசரமாக ரயில் அல்லது விமானத்தை பிடிக்க செல்கிறேன் என்றால் என்னுடைய விமானம் எந்த கேட்டில் இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒன்று ஆங்கிலத்தில் தகவல் கூறுகின்றனர். இல்லை இந்தியில் கூறுகின்றனர். நான் படித்தவள் எனக்கு இந்தி தெரியும். ஆங்கிலம் தெரியும். இன்றைக்கு எல்லா மக்கள் பயணம் செய்கிற இடத்தில் எல்லோருக்கும் ஆங்கிலம் தெரியும். இந்தி தெரியும் என்று சொல்லி விட முடியாது.

இருப்பினும் மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகம் மிகமிக முன்னேறிய மாநிலம். இதில், சுயமொழி தெரிந்து அதன் கீழ் பொருளாதாரத்தில், கல்வியில் மேம்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். அவர்களுக்கான பயணங்கள், அவர்களுக்கான போக்குவரத்து, அவர்களுக்கான தகவல்கள் தாய்மொழியில் இருக்க வேண்டும் என்பது அடிப்படை உரிமை. இந்த அடிப்படை உரிமை பறிப்பது என்பது அதிகாரத்தின் வெளிப்பாடு. அதிகாரத்தை எதிர்க்ககூடிய ஜனநாயக உரிமை எல்லோருக்கும் உண்டு. அந்த உரிமையை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

தேசிய கட்சிகளுக்கென்று ஒரு கொள்கை இருக்கிறது. அவர்களுக்கென்று கருத்து உள்ளது. அவர்களின் கொள்கை முடிவில் தான் முன்னெடுப்பார்கள். அதை நான் எதிர்க்கிறேன். நான்கு பேரில், 2 பேர் ஆதரிக்கிறார்கள் என்றால் 2 பேர் எதிர்க்கிறோம். நான் அதற்கு உடன்படவில்லை. என்னுடைய மொழி என்பது என்னுடைய மானம். என்னுடைய அடையாளம். என்னுடைய முகவரி. அது என்னுடைய வீடு. அது என்னுடைய குடும்பம். அது என்னுடைய சுயம். இதை தான் தந்தை பெரியார் முன்னெடுக்கிறார். தந்தை பெரியார் திராவிடம் என்கிற சொல்லை முன்னெடுக்காமல் தமிழ் என்ற சொல்லை முன்னெடுக்கிறார். ஏன் தமிழ் என்று முன்னெடுக்காமல் திராவிடம் என்று முன்னெடுக்கிறார்.

அது ஒரு இனக்குழு மக்களின் மிகப்பெரிய உரிமை பறிக்கப்படும் போது, அந்த இனக்குழு மக்களை அவர் முன்னெடுக்கிறார். அந்த சொல்லுக்கான அரசியல் மிகப்பெரியது. அது தமிழர்களை மட்டுமல்ல எல்லா மொழி பேசும் மக்களை காக்கக் கூடியது. இது ஒரு இனத்தின் மீது எழுப்படுகிற போர். இந்த போரை பன்னெடுங்காலமாக நம்முடைய முன்னோர்கள் எதிர்த்து வந்துள்ளனர். இனியும் நாங்கள் அதை எதிர்ப்போம். இரு மொழிகொள்கை தான். மும்மொழி கொள்கை இல்லை என்பதை சொல்லி கொள்கிறேன். நான் தமிழில் எழுதினால் மத்திய அரசின் பணிக்கு செல்ல முடியாது என்றால் அதற்கான சூழலை நான் சரி செய்ய வேண்டும்.

நான் இந்தி கற்க வேண்டும் என்று சொல்வது பிழையானது. இந்தி கற்றவன் பிழைக்கிறார். கற்கிறவனை சரி என்றும், கற்காதவனை பிழை என்று சொல்வது சரியான தலைமை நம்முடைய மாநிலத்துக்கு கிடைத்துள்ளது என்று சொல்ல முடியாது. அதை நாம் தமிழில் எழுதினாலும் செல்லுப்படியாகும் என்கிற பரிந்துரையை நாம் அதிகரிக்க வேண்டும். ஒரு மொழியை கற்று கொள்வது பிழையே கிடையாது. ஓரு மொழியை கற்றுக்கொள்ளவே கூடாது என்று நான் சொல்ல முடியாது. அம்பேத்கர் அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். கல்வி மிகவும் முக்கியமானது.

அதை விட முக்கியமானது அதிகாரம் நம் கையில் இருப்பது தான் என்று அம்பேத்கர் கூறியுள்ளார். என்னுடைய மக்களின் நலனுக்காக யோசிக்கிற மூளை முக்கிய முடிவு எடுப்பதற்கான சூழல் வரும். நாம் பாஸ் பண்ணால் போதும். நாம் போனால் போதும் என்று போக கூடாது. பல இடங்களில் தடுத்து நிறுத்தியவர்கள் தான் சுதந்திர போராட்ட தியாகிகள். மொழி போர் தியாகிகள். சட்ட எரிப்பு போராட்டத்தில் சிறை சென்றவர்கள். குலக்கல்வி திட்டத்தை தன்னை தானே அழித்து கொண்டவர்கள் என்று நமது தியாகிகளின் வரலாறு நீள்கிறது. எனக்காக என்று இல்லாமல் நாட்டிற்காக நம்முடைய மொழிக்காக, மொழி பேசும் மக்களுக்காக வரலாறு இன்று இல்லை. தலைவர்களின் வரலாறு முழுமையாக சொல்லப்படவில்லை.

தமிழகத்துக்கு தமிழ் தெரியாமல் இங்கே வேலைக்கு வருகிறார்கள். குறிப்பாக, தமிழ் தெரியாமல் நீதிபதியே நியமிக்கின்றனர். அவருக்கு என்னுடைய வலி எப்படி தெரியும். அதனால், தான் மொழிவாரியான உரிமை, மொழிவாரியான நாடு என்று நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். ஜனநாயக உரிமையுடன் கூடிய அதிகாரத்தை கையில் எடுத்து இருக்க கூடிய சூழலை அடிப்படை சட்ட ரீதியாக திருத்துவதற்கான வழி ஏற்படுத்த வேண்டும். நமக்கு முன்னோர்கள் செய்தார்கள். கடைசியாக சுதந்திரம் கிடைத்த 25 வருடத்துக்கு பிறகு அதை செய்தனர். ஆனால், அதற்கு பின்னால் செய்ய யாரும் இல்லை. அதற்கு அடுத்தவர்கள் எல்லாம் பொழுது போக்கு என்று திசை திருப்பி விட்டனர்.

40 வருடம் முன்பு இருந்த குணம், நமக்கான சூழல், பழைமையை போற்றுவது, வரலாற்றை வாசிப்பது, பொது விஷயங்களில் ஈடுபடுவது, மற்றவர்களை பற்றி கவலைப்படுவது அப்படிப்பட்ட பண்பு என்பது இல்லாமல் போய் விட்டது. அதனால் தான் போராட்டத்திற்கான போர்க்குணம் இல்லாமல் போய் விட்டது. சிலர் போராடுகிறார்கள். ஆனால் வலுசேர்க்கும் வகையில் சூழல் சிதறடிக்கப்படுகிறது. அந்த சிதறடிக்கிற அரசியலுக்கு பலியாகாமல் நாம் தடுக்க வேண்டியது புத்தி என்கிற கூர்மை தான். அந்த அறிவுக்கூர்மை தான் வேண்டும். களத்தில் இறங்கி போராடுவது அல்ல. புத்தியால் சில விஷயங்களை மாற்றி அமைக்க கூடிய வல்லமை பெறுவது, அதை நமது இளைஞர்கள் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 40 வருடம் முன்பு இருந்த குணம், நமக்கான சூழல், பழைமையை போற்றுவது, வரலாற்றை வாசிப்பது, பொது விஷயங்களில் ஈடுபடுவது, மற்றவர்களை பற்றி கவலைப்படுவது அப்படிப்பட்ட பண்பு என்பது இல்லாமல் போய் விட்டது.

Tags : country ,Parveen Sultana , One country, one language is not correct in a country where people speak different languages: Professor Parveen Sultana
× RELATED நாட்டின் ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ்...