×

துணை மருத்துவ படிப்பு கலந்தாய்வு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், ரேடியோ டெக்னாலஜி, ரேடியோ தெரபி, அனஸ்தீசியா, கார்டியாக் டெக்னாலஜி உட்பட 17 துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. இதில் அரசு கல்லுாரியில் உள்ள ஆயிரத்து 590 இடங்களுக்கும், தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் 13 ஆயிரத்து 858 இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டது. 2020-21ம் கல்வியாண்டுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த அக்டோபரில் நடந்தது. மொத்தம் 38 ஆயிரத்து 244 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 37 ஆயிரத்து 334 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான தரவரிசை பட்டியல் www.tnmedicalselection.net என்ற மருத்துவ மாணவர் சேர்க்கை குழு இணையதளத்தில் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது.

துணை மருத்துவப் படிப்பு கவுன்சலிங், 9ம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும் எனவும் முதல்நாளில், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள், விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பிரிவினருக்கும் அதைத் தொடர்ந்து, வரும் 10ம் தேதி (இன்று) முதல் 23ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என்றும் தமிழக மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்தது. இந்நிலையில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேற்று ஆன்லைனில் தொடங்கியது. கலந்தாய்வில் பங்கேற்க 53 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மொத்தம் 27 பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து நேற்றைய கலந்தாய்வில் அரசு கல்லூரிகளில் மொத்தம் 23 இடங்கள் நிரப்பப்பட்டன. அதை தொடர்ந்து இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது.

Tags : consultation , Adjunct medical study consultation began
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...