21ம் தேதி கட்சி அலுவலகம் திறப்பு இபிஎஸ், ஓபிஎஸ் 20ல் டெல்லி பயணம்: கூட்டணி, சசிகலா குறித்து அமித்ஷாவிடம் பேச்சு

சென்னை: டெல்லியில் அதிமுக அலுவலக கட்டுமான பணிகள் முடிவடைந்து, 21ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 20ம் தேதி டெல்லி செல்கிறார்கள். டெல்லியில் 20ம் தேதி மத்திய நிதி ஆயோக் கூட்டம் நடக்கிறது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார். இதையடுத்து அன்றைய தினமே முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பாஜ மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து பேசவும் திட்டமிட்டுள்ளனர்.

அப்போது தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், அதிமுக - பாஜ கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதி என்பது குறித்தும் பேச திட்டமிட்டுள்ளனர். மேலும், 4 ஆண்டு சிறையில் இருந்துவிட்டு சென்னை திரும்பியுள்ள சசிகலா தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளார். அவர், அதிமுக கட்சி கொடியை மற்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரை பயன்படுத்தியே வருகிற தேர்தலை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் அமித்ஷாவின் ஆலோசனைகளை பெற முடிவு செய்துள்ளனர்.

Related Stories:

>