×

ஹிமவத் கோபால்சாமி மலையில் மன்னர் யதுவீர் குடும்பத்துடன் சாமி தரிசனம்

சாம்ராஜ்நகர்: சாம்ராஜ்நகருக்கு தன் குடும்பத்துடன் வருகை தந்த மைசூரு இளவரசர் யதுவீர் கோபாலசாமி மலைக்கு சென்று சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். மைசூரு மன்னர் யதுவீர கிருஷ்ணதத்த சாம்ராஜ் உடையார் தன் மனைவி திரிஷிகா மற்றும் மகன் ஆத்யாவீர் உள்பட குடும்பத்தினருடன் சாம்ராஜ்நகருக்கு வருகை தந்தார். குண்டல்பேட்டையில் உள்ள ஹிமவத் கோபாலசாமி மலைக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். யதுவீர் குடும்பத்தினரை தலைமை அர்ச்சகர் கோபால கிருஷ்ணபட் பூர்ண கும்ப மரியாதை அளித்து வரவேற்றார்.

பின்னர் யதுவீர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹிமவத் கோபாலசாமி மலைக்கு வந்து தரிசனம் செய்து வருகிறோம். அதேபோல் இந்த ஆண்டும் கோபால்சாமி மலை தரிசனத்திற்கு வந்துள்ளோம். நாட்டு மக்கள் கொரோனா மற்றும் பல்வேறு பிரச்னைகளிலிருந்து விடுபட ேவண்டும் என்றார். பின்னர் மன்னர் யதுவீர் தன் குடும்பத்தினருடன் மைசூரு புறப்பட்டு சென்றார்.

Tags : King Yadav ,Himawat Gopalsamy Hill , Himavat Gopalsamy Hill, King Yaduveer, Sami Darshan
× RELATED சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது பாஜக..!!