மார்ச் 27ம் தேதி மெகா லோக் அதாலத்: முதன்மை நீதிபதி சுபாகவுடா அறிவிப்பு

சிக்கமகளூரு: மாவட்டம் முழுவதும் உள்ள 7,374 வழக்குகளில் தீர்வு காண வரும் மார்ச் 27ம் தேதி மெகா அதாலத் நடத்தப்படும் என்று மாவட்ட முதன்மை நீதிபதி சுபா கவுடா தெரிவித்தார். சிக்கமகளூரு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சுபா கவுடா கூறுகையில், சிக்கமகளூரு மாவட்டம் முழுவதும் 7,374 வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளது. இந்த வழக்குகளுக்கு தீர்வு காண வரும் மார்ச் 27ம் தேதி மெகா அதாலத் நடத்தப்படும்.

இந்த லோக் அதாலத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் வழக்கிற்கான தீர்வினை பெற்றுக்கொள்ள வேண்டும். தற்போது 1375 பேர் தங்கள் வழக்குகளில் சமரசம் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு 3724 வழக்குகளில் லோக் அதாலத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த மெகா லோக் அதாலத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் வழக்கிற்கு தீர்வு காணவேண்டும். இதனால் பொதுமக்கள் நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்க்கலாம்’’ என்றார்.

Related Stories: