பஸ்-பைக் மோதி வாலிபர் பலி

சாம்ராஜ்நகர்: அரசு பஸ்-இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் பைக் பயணி பஸ்சின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா ஜி.பி மல்லப்பாபுரா காலனியை சேர்ந்தவர் மனோஜ் (26). இவர் மத்திபுராவிலிருந்து கொள்ளேகால் வந்து கொண்டிருந்தார்.

அப்போது மதுவனஹள்ளி கிராமத்தின் அருகேயுள்ள குருஜி எனும் இடத்தில் மாதேஷ்வரா மலைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ்சும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பைக்குடன் மனோஜ் பஸ்சின் சக்கரத்தின் அடியில் சிக்கிக்ெகாண்டார். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு கொள்ளேகால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக மைசூரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனோஜ் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கொள்ளேகால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>