×

நாட்டில் அடுத்த 30 ஆண்டில் 30 கோடி வழக்குகள் வரை உயர வாய்ப்பு: நீதிபதி சங்கர் கணபதி பண்டித் தகவல்

பெங்களூரு: நாட்டில் அடுத்த 30 ஆண்டில் 30 கோடி வழக்குள்கள் வரை உயர வாய்ப்புள்ளது என்று உயர் நீதிமன்ற நீதிபதி சங்கர்கணபதிபண்டித் தெரிவித்தார். பெங்களூருவில் நடைபெற்ற சட்ட கல்லூரி மாணவர்களுடனான கருத்தரங்கில் கலந்துக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி சங்கர்கணபதிபண்டித் பேசியதாவது, கடந்த ஆண்டு செப்டம்பர் வரை பல்வேறு நீதிமன்றங்களில் குறைந்தபட்சம் 4 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. நீதிபதிகளின் காலி பணியிடங்கள் காரணமாக வழக்குகளை விசாரிப்பதில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் வழக்கு நிர்வாகத்திற்கான ஒரு கட்டமைப்பை வழங்க தேசிய நீதிமன்ற மேலாண்மை முறையின் திட்டத்தை 2012-ல் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. கல்வியறிவு, தனிநபர் வருமானம், மக்கள் தொகை அதிகரிப்புடன் ஆண்டு தோறும் தாக்கல் செய்யப்படும் புதிய வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்த 30 ஆண்டுகளில் வழக்கின் எண்ணிக்கை 30 கோடியாக உயர வாய்ப்புள்ளதாக இந்த திட்டம் மதிப்பிட்டுள்ளது.  இந்த வழக்குகளை விசாரிக்க குறைந்த பட்சம் 75 ஆயிரம் நீதிபதிகள் தேவைப்படுவார்கள். இதனால் மாற்று முறையில் வழக்கை தீர்க்கும் முறைகளுக்கான அடிப்படை தேவையுள்ளது’’ என்றார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஓய்வுபெற்ற நீதிபதி பூதிஹால் ஆர்.பி. கர்நாடக உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சுஷிலாசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Shankar Ganapathy Pandit ,country , Bangalore, Cases, Judge, Information
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!