நிலத்தகராறில் மோதல்: 2 பேர் சுட்டுக்கொலை

நொய்டா: நொய்டாவில் நிலத்தகராறில் நடந்த மோதலில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கிரேட்டர் நொய்டா பதல்பூர் போலீஸ்நிலைய பகுதியில் கிர்தர்பூர் கிராமத்தில் சாலையை ஒட்டியுள்ள ஒரு நிலம் தொடர்பாக இரு குழுவினர் இடையே மோதல் இருந்து வந்தது. இதுதொடர்பாக போலீசிலும் புகார்கள் அளிக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து இருதரப்பினரையும் நேரில் ஆஜராகச்சொல்லி போலீசார் உத்தரவிட்டு இருந்தனர். ஆனாலும் இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்டனர். அப்போது ஒருதரப்பை சேர்ந்த தேவேந்திரா மற்றும் அவரது ஆதரவாளர்களை அமித் மற்றும் சலோக் என்பவர் தரப்பினர் தாக்கினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த தேவேந்திரா தனது கைத்துப்பாக்கி மூலம் சரமாரியாக சுட்டார். இதில் அமித் மற்றும் சலேக் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். அவர்களது குழுவை சேர்ந்த பிரேம் படுகாயம் அடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணையில் தேவேந்திரா லைசென்ஸ் பெற்ற துப்பாக்கி மூலம் சுட்டது தெரிய வந்தது. இதையடுத்து அதற்கான உரிமத்தை ரத்து செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் கிராமத்தில் மோதல் ஏற்படாமல் தடுக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>