×

தவறான தகவல்கள் தரும் கணக்குகளை நீக்கும் பிரச்சனை: மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ட்விட்டர் முடிவு

டெல்லி: ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணக்குகளை முடக்குமாறு உத்தரவிட்டுள்ள நிலையில் ட்விட்டர் நிர்வாகம் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது. டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் குடுத்து வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் தங்களுது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தொடர்ந்து தவறான தகவல்கள் ட்விட்டர் பரப்பப்பட்டு வருவதக மத்திய அரசு குற்றம்ச்சாட்டி வருகிறது.

வெறுப்புணர்வை தூண்டும் வகையில் விவசாயிகள் இன அழிப்பு என்ற ஹாஷ்டேக்கை பரப்பியதாக ஏற்கனவே 250 ட்விட்டர் கணக்குகளை முடக்க மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. விவசாயிகள் தொடர்பாக பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் தவறான தகவல்களை பரப்பி வருவதாக மத்திய அரசு கூறிவருகிறது. இது தொடர்பாக 1,178 ட்விட்டர் கணக்குகளை முடக்க மத்திய அரசு பரிந்துரை நேற்று பரிந்துரை செய்தது. விவசாயிகள் போராட்டம் குறித்த தவறான தகவல்களை பரப்பியதாக பல கணக்குகளை முடக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

முடக்கப்பட்ட கணக்குகளில் சுமார் 250 கணக்குகளை திரும்ப பயன்படுத்த ட்விட்டர் நிர்வாகம் அனுமதி அளித்தது. டிவிட்டர் நிர்வாகத்துக்கு எச்சரிக்கை அளித்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியது. இந்த பிரச்சனை தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ட்விட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பொதுமக்களின் கருத்துக்களை பாதுகாக்கும் அதேநேரத்தில் மத்திய அரசின் உத்தரவு குறித்தும் பரிசீலித்து வருவதாக ட்விட்டர் நிர்வாகம் கூறியுள்ளது.


Tags : government , Problem with deleting misleading accounts: Twitter decides to negotiate with federal government
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...