×

கலெக்டர் கார் முன் பெண்கள் தர்ணா

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் கார் முன் அமர்ந்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகாசி பள்ளபட்டியை சேர்ந்தவர் மீனா. இவருக்கு சொந்தமான நிலம் கீழத்திருத்தங்கல் கிராமத்தில் உள்ளது. அந்த நிலத்தை அளப்பதற்கு மனு செய்துள்ளார். சிவகாசி சார் ஆட்சியர் விசாரணை செய்து நிலத்தை அளக்க விஏஓ.விற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதிகாரிகள் வந்து நிலத்தை அளப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து  பிரச்சனை செய்து தடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் உரிய பாதுகாப்புடன் நிலத்தை அதிகாரிகள் அளந்து தர வலியுறுத்தி நேற்று மீனா குடும்பத்தினர் கலெக்டர் கார் முன் அமர்ந்து முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகாரிகள் சமரசம் செய்து மனு அளித்து செல்லும்படி தெரிவித்தனர். அதன் பின்னர் கலெக்டர் மனு பெறும் இடத்திற்கு சென்ற மீனா அதிகாரிகளிடம் முறையிட்டு வாக்குவாதம் செய்தார். மனு பெறும் இடத்தில் இருந்த சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார் நிலத்தை அளந்து தர உரிய ஏற்பாடுகள் செய்வதாக உறுதி அளித்தார். இதை தொடர்ந்து மீனாவின் குடும்பத்தினர் கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags : Girls , Virudhunagar: There was a commotion as women sat in front of the Virudhunagar Collector's car and engaged in a struggle. Meena is from Sivakasi valley.
× RELATED ஆம்புலன்சில் பிறந்த இரட்டை பெண் குழந்தைகள் சேத்துப்பட்டு அருகே