×

வத்திராயிருப்பு அருகே உடைக்கப்பட்ட தரைப்பாலம் புதிய பாலப் பணி தொடங்குவது எப்போது:வாகன ஓட்டிகள் கேள்வி

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே, பாலப்பணிக்காக தரைப்பாலம் உடைக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய பாலம் கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வத்திராயிருப்பிலிருந்து தாணிப்பாறைக்கு செல்லும் வழியில் லிங்கம் கோயில் உள்ளது. இக்கோயில் பகுதியில் தரைப்பாலம் இருந்தது. இதை உடைத்து பெரிய பாலமாக கட்டுவதற்காக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இடித்தனர்.
கட்டுமானப் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், பாலம் பணி தொடங்கப்படவில்லை.

தரைப்பாலம் உடைக்கப்பட்டதால் விஷேச காலங்களில் சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வாகனங்களில் செல்லும் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.
டூவீலர்களின் டயர்கள் பஞ்சராகின்றன. வாகன ஓட்டிகள் தவறினால் பள்ளத்தில்தான் விழவேண்டும்.

மேலும், தோட்டத்திற்கு செல்லும் விவசாயிகளு, ராம்நகர் மலைவாழ் மக்களும் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் பெய்த மழையால், தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். எனவே, புதிய பாலம் கட்டும் பணியை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தொடங்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,ground bridge ,Motorists ,Vatrairup , Sattur: Brown Accidents One The National Higway Near The Tamil Nadu Government Transport Office In Sattur. Take Austen to Prevent This
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...