×

கோதையாறு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் :கண்காணிப்பு கேமரா பதிவால் பீதி

குலசேகரம் : குமரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் முண்டன்துறை புலிகள் சரணாலயத்தோடு இணைந்த பகுதிகள் ஆகும். இதனால் அவ்வப்போது குமரி மாவட்ட வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக மலைவாழ் மக்கள் கூறுவதுண்டு. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் பேச்சிப்பாறை அணை பகுதியில் பெண் புலி ஒன்று முள்ளம் பன்றியை விழுங்கி இறந்து கிடந்தது.

இதனால் புலிகள் குறித்த அச்சம் அதிகரித்தது. சாலையில் குறுக்கே புலிகள், சிறுத்தைகள் நடமாடுவதாக அவ்வப்போது தகவல்கள் வந்தன. சமீபகாலமாக அந்த பேச்சு இல்லாமல் இருந்தது.இந்த நிலையில் கடந்த வாரம் கோதையாறு மின்நிலையம் ஒன்றின் அருகில் உள்ள கீழ்கோதையாறு அணை பகுதியில் சிறுத்தை ஒன்று நடந்து செல்வது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

சிறுத்தை நடமாடும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் புலிகளும் இப்பகுதியில் இருக்க கூடும் என பொதுமக்களிடையே மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே உண்மையிலேயே இப்பகுதியில் புலிகள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை வனத்துறை உறுதி செய்ய வேண்டும் என மலைவாழ் மக்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tags : area ,Kodaikanal , Kulasekara: The forest areas in Kumari district are adjacent to the Mundanthurai Tiger Reserve. Thus the occasional Kumari district
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்