×

கடும் நிதி நெறுக்கடியில் ஏர் இந்தியா நிறுவனம்: நடப்பாண்டில் நஷ்டம் 10,000 கோடி அளவுக்கு இருக்கும் என தகவல்

டெல்லி: நடப்பு நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனத்தின் நஷ்டம் 10,000 கோடி அளவுக்கு இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க முயற்சிகள் நடைபெற்று வருகினறன. 2007-ல் ஏர் இந்தியா நிறுவனத்துடன் உள்நாட்டு விமான சேவை நிறுவனமான இந்தியன்  ஏர்லைன்ஸ் நிறுவனம் இணைக்கப்பட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட ஆண்டு வாரியான நஷ்டத்தில் இது தான் மிக அதிகமான தொகையாக உள்ளது என கூறப்படுகிறது. கடந்த 2018-ம் நிதி ஆண்டில் ரூ. 5,300 கோடியாக இருந்த நஷ்டம், 2019-ம் நிதி ஆண்டில் ரூ. 8,500 கோடியாக உயர்ந்தது. இந்த நிலையில் 2020-ம் நிதி ஆண்டில் நஷ்டம் ரூ.10 ஆயிரம் கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவாக ஏர் இந்தியாவின் மொத்த மதிப்பிற்கு பாதிப்புகள் ஏற்பட்டு, அதன் பங்கு  விற்பனை விலை குறைய வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது. கடும் நிதி நெருக்கடியில் ஏர் இந்தியா நிறுவனம் தடுமாறி வருகிறது. பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான நிதி நெருக்கடியில் ஏர் இந்தியா தவித்து வருகிறது. இதுபோன்ற சூழலில்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏர் இந்தியாவின் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்ட மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்திருந்தது.


Tags : Air India ,crisis , Heavy financials, crisis, Air India, loss 10,000 crore, information
× RELATED விமானப்பணி நேர வரம்புகளை மீறிய...