×

மதுரை தவிர மற்ற அனைத்து மாநில எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கும் மத்திய அரசு நிதி!: தகவல் அறியும் சட்டத்தில் அம்பலம்..!!

டெல்லி: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மட்டும் தான் ஜப்பான் நாட்டு நிறுவனத்தின் மூலம் கடன் பெற்று அமைக்கப்படுவது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 14 எய்ம்ஸ் மருத்துவமனைக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்குவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. தென்காசி மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் எழுப்பிய கேள்வியின் மூலம் இது தெரியவந்துள்ளது. 85 சதவீத நிதியை ஜப்பான் ஜைக்கா நிதி நிறுவனமும் 15 சதவீத நிதியை மத்திய அரசு வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.

குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் கட்டப்பட்டு வரும் 14 எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது தெரியவந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் தான் கடன் மூலம் கட்டப்படுகிறது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுவிட்டன. ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி 2 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகாத நிலையே நீடிக்கிறது.

மதுரை தோப்பூரில் 1764 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக 2019 ஜனவரி மாதம் பிரதமர் மோடி நேரில் வந்து அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பாண்டியராஜா தெரிவித்ததாவது, இதுவரை அதிகாரபூர்வமாக இல்லாமல் வாய்மொழியாகவே மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசு நேரடியாக நிதி ஒதுக்கீடு செய்வதாக கூறி வந்தனர். ஆனால், தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.


Tags : government ,hospitals ,state ,Madurai ,AIIMS , Madurai, State Aims Hospital, Central Government Finance, Information Act
× RELATED ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் டயாலிசிஸ் பிரிவு துவக்கம்