சங்ககிரி வட்டாரத்தில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க லஞ்சம்: முதல்வரின் உறவுக்காரப்பெண் பரபரப்பு புகார்

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி டவுன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வி (38). சங்ககிரி அடுத்த வளையசெட்டிபாளையம் அங்கன்வாடி மைய அமைப்பாளர். இவர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தமிழக முதல்வரின் பெரியம்மாவின் பேத்தியான நான், கடந்த 10 ஆண்டுகளாக, அங்கன்வாடி பணியாளராக இருந்து வருகிறேன். குழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலர், கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையாக ஊக்க ஊதியம் வழங்கவில்லை.

வட்டாரத்தில் உள்ள பணியாளர்களுக்கு ஊதியம் மற்றும் ஊக்க தொகை வழங்குவதற்கு லஞ்சமாக பணம் கேட்டு வருகிறார். சமீபத்தில் எனது அங்கன்வாடி மையத்தின் பூட்டை உடைத்து, மாற்று பூட்டு போட்டுள்ளார். வட்டாரத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு வழங்கும் பொருட்களை, வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இது குறித்து நடவடிக்கை எடுத்து நிலுவை தொகையை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு செல்வி தெரிவித்தார்.

Related Stories:

>