×

மதசார்பற்ற கூட்டணி நாட்டுக்கு தேவை: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

திருவாரூர்: புதுச்சேரி மாநில முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள் இல்ல திருமணம் திருவாரூர் அருகே பெத்தாரண சுவாமி கோயிலில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேமுதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மக்களுக்கு எதிரான திட்டங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம் ஆகியவற்றினை மத்திய அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கும்போது அரசு எப்படி நடத்த முடியும். இதன்காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.

நாட்டில் பலதரப்பட்ட மதத்தினர் வாழ்ந்து வரும் நிலையில் மதசார்பற்ற கூட்டணிதான் தேவைப்படுகிறது. 30 கோடி இஸ்லாமியர்களை இங்கிருந்து அனுப்பி விட முடியுமா. மதசார்பற்ற நாடாகத்தான் இருக்க வேண்டும். அந்த வகையில் தமிழகத்திலும், புதுவையிலும் மதசார்பற்ற கூட்டணி தொடர்ந்து நீடித்து வருகிறது என்றார்.

Tags : country ,Narayanasamy ,interview ,Puducherry , Secular Alliance, Puducherry Chief Minister, Interview
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளர், கட்சி...