×

ஆஸி. ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் குவித்தோவா

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, செக் குடியரசின் பெத்ரா குவித்தோவா தகுதி பெற்றுள்ளார். முதல் சுற்றில் பெல்ஜியம் வீராங்கனை கிரீட் மின்னனுடன் நேற்று மோதிய குவித்தோவா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 21 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒசாகா (ஜப்பான்), செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஹாலெப் (ரோமானியா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறினர்.

ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் தனது முதல் சுற்றில் 0-6, 4-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் பெர்னார்டா பெராவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட முன்னணி வீரர்கள் ஜோகோவிச், டொமினிக் தீம், அலெக்சாண்டர் ஸ்வெரவ், ஷபோவலாவ், வாவ்ரிங்கா, கிர்ஜியோஸ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

Tags : Aussie ,round ,Quito , Australian Open, Tennis, Quito
× RELATED மோடி அரசு தரும் நெருக்கடி:...