காக்களூர் பால் பண்ணையில் 90 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை தீவன கிடங்கு: காணொலி மூலம் முதல்வர் திறந்தார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் பால் பண்ணையில் 90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கால்நடை தீவன கிடங்கு மற்றும் நிர்வாக அலுவலக கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், முதன்மை செயலாளர் கே.கோபால், ஆவின் மேலாண்மை இயக்குநர் ஆர்.நந்தகோபால் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதைத்தொடர்ந்து காக்களூர் பால் பண்ணையில் 90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கால்நடை தீவன கிடங்கு மற்றும் நிர்வாக அலுவலகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் த.சந்திரன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். இதில் துணை மேலாண்மை இயக்குநர் என்.முருகேசன், துணை பொது மேலாளர் வி.ஆர்.கோமதி, துணை பொது மேலாளர் (பால் பெருக்கம்) லிடியாமார்க்ரெட், பொது மேலாளர் சுஜாதா, மேலாளர்கள் டாக்டர் உமாசங்கர், டாக்டர் அனிஷ் ஆனந்த்பால், கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேஸ்வரலு, தரக்கட்டுப்பாட்டு அலுவலர்கள் அனிதா, மாலதி மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

More
>