×

ஜெயலலிதா போல்...ஜெயலலிதா போன்று தன்னை அலங்கரித்து கொண்ட சசிகலா, பச்சை நிற புடவை, குங்குமப்பொட்டு, நாமம் வைத்திருந்தார்.

சசிகலாவுக்கு கார் கொடுத்தவர் உள்பட 7 பேர் அதிமுகவிலிருந்து நீக்கம் சசிகலா சென்னை வரும்போது கட்சிக் கொடியை பயன்படுத்தக் கூடாது என்று போலீசார் கெடு விதித்தனர். இதனால் பெங்களூரில் இருந்து ஜெயலலிதாவின் காரில் சசிகலா வந்தார். தமிழக எல்லை வந்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சம்பங்கியின் காரில் பயணம் செய்தார். இதனால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். அவரைப் போல, வரவேற்பில் கலந்து கொண்டதற்காக ஒன்றிய விவசாயப் பிரிவு செயலாளர் சந்திரசேகர ரெட்டி, ஒன்றிய கழக மாவட்ட பிரதிநிதி ஜானகி ரவீந்திர ரெட்டி, கொம்மேப்பள்ளி ஊராட்சி தகவல் தொழில் நுட்பப் பிரிவு பொறுப்பாளர் பிரசாந்த் குமார், ஒன்றிய இளைஞர் பாசறை தலைவர் நாகராஜ், சிங்கிரிப்பள்ளி, சூளகிரி மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஆனந்த், திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தட்சணாமூர்த்தி ஆகியோரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை கட்சியின்
ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டனர்.

Tags : Sasikala ,Jayalalithaa , Like Jayalalithaa ... Sasikala, who dressed herself like Jayalalithaa, had a green sari, saffron and name.
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!