×

நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து கழகத்துக்கு அதிக நிதி ஒதுக்குவது அவசியம்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் வரை பணிபுரிகின்றனர். அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் ஈட்டப்படும் வருவாய் பல்வேறு செலவினங்களுக்கு போதுமானதாக இல்லை. குறைவான வருவாயே ஈட்ட முடிகிறது. இதனால் ஆண்டுதோறும் சுமார் ₹1,500 கோடிக்கு மேல் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே அரசு போக்குவரத்துக் கழகங்களை லாபத்தில் இயக்கிடவும், பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவும் நிதிப்பற்றாக்குறையை போக்குவதற்கும் தமிழக அரசு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த வேண்டும். போக்குவரத்துத்துறை பணியாளர்களின் குடும்ப நலன் காக்க பிறதுறை பணியாளர்களை போன்று ஊதியம் பெறவும் ஓய்வூதியப் பலன்கள் அவ்வப்போதே கிடைத்திடவும், போக்குவரத்துக் கழகங்களின் பணியாளர்கள் அனைவரையும் அரசு பணியாளர்களாக்கிடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Tags : GK Vasan ,Transport Corporation , It is necessary to allocate more funds to the loss-making Transport Corporation: GK Vasan insists
× RELATED கோடைகாலத்தில் தமிழக மக்களின் தண்ணீர்...