×

செங்கோட்டை கலவரம் மேலும் ஒருவர் கைது

புதுடெல்லி: குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் அரங்கேறிய வன்முறை தொடர்பான வழக்கில் தொடர்புடையதாக, சண்டிகரை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லி எல்லைகளில் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 26ம் தேதி குடியரசு தினவிழா டெல்லியில் கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணியை நடத்தினர். ஆனால், அவர்கள் மத்திய டெல்லிக்குள் நுழைய போலீசார் அனுமதி மறுத்து பேரிகார்டர்களை வைத்து தடுத்தனர்.

இதனர் ஆத்திரமடைந்த அவர்கள் தடுப்புகளை மீறி சென்றனர். அப்போது, போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். இதையடுத்து, பின்வாங்கிய போராட்டக்காரர்கள் செங்கோட்டை நோக்கி நகர்ந்து சென்று அங்கு வன்முறையை அரங்கேற்றினர். செங்கோட்டையில் வீசிய தேசிய கொடியினையும் அகற்றி சீக்கிய கொடியை பறக்கவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இநத வன்முறையை முன்னின்று நடத்தியவர்கள் மற்றும் வன்முறையோடு தொடர்புடையவர்களை அடையாளம் காணும் பணியை தொடங்கிய போலீசார் பஞ்சாப் நடிகர் தீப் சித்து உள்ளிட்ட சிலரது கைது செய்ய முயன்றனர். அவர்கள் தலைமறைவானதால் அவர்கள் பற்றிய தகவலை தெரிவிப்போருக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என போலிசார் அறிவித்தனர். இந்த வரிசையில் பரிசு அறிவித்து தேடப்பட்டு வந்த சுக்தேவ் சிங்(60) என்பவரை சண்டிகரிலிருந்து நேற்று போலீசார் கைது செய்தனர். இவர் செங்கோட்டை கலவரத்தை முன்னின்று நடத்தியவர் என்றும், சம்பவம் நடத்தபோது அந்த பகுதியில் இவர் இருந்தார் என்பவதையும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த செங்கோட்டை வன்முறை வழக்கில் இவருடன் சேர்த்து இவவரை சுமார் 127 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags : riot ,Red Fort , Red Fort riot One more arrested
× RELATED வம்பு சண்டைக்கு போறதில்ல; வந்த சண்டையை...