×

காஜியாபாத்தில் அதிர்ச்சி 2 பெண்களை சுட்டுக்கொன்று பணம், நகை கொள்ளை

காஜியாபாத்: கொள்ளை சம்பவத்தின் போது, பிணைக்கைதிகளாக பிடித்து வைத்த இரண்டு பெண்களை கொள்ளையர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் காஜியாபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஜியாபாத்தின் சரவஸ்வதி நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்த அன்சு மற்றும் டாலி இருவரும் நண்பர்கள். இதில், டாலியின் குழந்தைகள் இருவருக்கு அன்சு தனது வீட்டில் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு நன்கு அறிமுகமான உமா மற்றும் சோனு இருவரும் அங்கு வந்தனர். அனைவரும் தேநீர் அருந்திய பின்னர், அன்சு, டாலி மற்றும் இரு குழந்தைகளை உமாவும் சோனுவும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டனர். பின்னர் வீட்டில் இருந்து பணம், நகைகளை கொள்ளையடித்தன்.

இதை தடுக்க முயன்றபோது அன்சு மற்றும் டாலியை சோனு துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். அதன்பின் குழந்தைகள் கவுரி(10), மீனாட்சி(7) மற்றும் ருத்ரா(5) மூவரையும் கத்தி மற்றும் ஸ்குரு டிரைவரால் குத்தி காயப்படுத்தினர். எனினும் குழந்தைகள்  அங்கிருந்து தப்பிச்சென்றனர்.அக்கம்பக்கத்தினர் குழந்தைகள் மூவரையும் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மூவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக மூத்த போலீஸ் கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி தெரிவித்தார். மேலும், விசாரணையில் இந்த கொள்ளையை அரங்கேற்ற சோனு மற்றும் உமா இருவரும் நீண்ட நாட்களாக திட்டமிட்டதும் தெரியவந்தது. கொள்ளை சம்பவம் நடந்த வீட்டின் அருகேயுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு ஆய்வு செய்தபோது, அதில் பதிவாகியிருந்து சோனு மற்றும் உமாவை குழந்தைகள் அடையாளம் காட்டினர்.

இதையடுத்து உமாவின் வீட்டிற்கு சென்ற போலீசார் கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் மற்றும் பிற பொருட்களை அங்கிருந்து கைப்பற்றினர். அதோடு, உமாவை கைது செய்தனர். சோனு தனது சொந்த கிராமத்திற்கு சென்றுள்ள தகவலை கைது செய்யப்பட்ட உமா போலீசில் தெரிவித்தார். அந்த தகவலின் அடிப்படையில் பின்தொடர்ந்த போலீசார் சோனுவை செல்போன் சிக்னலை கொண்டு தாஸூனா அருகே மடக்கி பிடித்தனர். அப்போது போலீசார் மீது சோனு துப்பாக்கி சூடு நடத்திதப்ப முயன்றான். இதில் போலீசார் காயமடைந்தனர்.மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு நைதானி கூறினார்.

Tags : women ,Ghaziabad ,jewelery , Shocked in Ghaziabad 2 women shot dead and robbed of money and jewelery
× RELATED கள்ளழகர் திருவிழாவில் நகை திருட்டு: 5 பெண்கள் கைது