×

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்: வியாபாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பெங்களூரு: சுற்றுச்சூழல் பாதிப்பை பொருட்படுத்தாமல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை காய்கறி விற்பனையாளர்கள், திருமண மண்டபங்கள், சிற உணவகங்கள் மற்றும் நகரம் முழுவதும் உள்ள பல நிறுவனங்கள் இதை இன்னும் பயன்படுத்துகின்றனர். இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ``ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை மாநிலம் மற்றும் நகரத்திலிருந்து முற்றிலும் அகற்ற வேண்டும். இதுகுறித்து பொதுமக்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் எரிக்கப்படும் போது அருகில் இருப்பவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் இதனால் ஏற்படும் நச்சுபுகை மண்டலம் காற்றில் பரவி புற்று நோயை ஏற்படுத்தும்.

சமூக ஊடகங்களில் இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஷைஸ்டா அடிக்கடி பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து வர்த்தகர்களுக்கு இதுகுறித்து ஆலோசனை வழங்கியுள்ளோம். பொதுமக்கள் கட்டாயம் சொந்த துணி பைகளை கொண்டு வரவேண்டும்’’ என கேட்டுக்கொண்டுள்ளனர். பெங்களூரின் இணை நிறுவனர் ஒடெட் கட்ராக் கூறுகையில், ``கோவிட்டுக்கு முந்தைய காலங்களில் பிளாஸ்டிக் தடைவிதிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று காரணமாக நோய்பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளால் இதனை கவனிக்கமுடியவில்லை’’ என்றார்.

* அபராதம் விதிப்பு
மாநகராட்சியின் சிறப்பு ஆணையர் ரன்தீப் கூறுகையில், ``கோவிட்டிற்குப் பிறகு மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பொதுமக்கள் நோய் தொற்று பரவாமல் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து நாங்கள் பலமுறை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தும் வணிகர்களுக்கும் அபராதம் விதிக்க மார்ஷல்களுக்கு உரிமை உண்டு’’ என தெரிவித்தார்.

Tags : activists ,merchants , Avoid the use of plastic: Social activists demand for merchants
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...