×

சசிகலாவிற்கு கார் வழங்கியதால் எஸ்.ஆர்.சம்பங்கி அதிமுகவில் இருந்து நீக்கம்

சென்னை: சூளகிரி கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஆர்.சம்பங்கி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பெங்களூருவில் இருந்து சென்னை வரும் சசிகலாவுக்கு கார் வழங்கிய நிலையில் சம்பங்கி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சசிகலாவுக்கு வாகனம் தந்தவர், வரவேற்பு அளித்தவர்கள் என 7 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். சந்திரசேகர ரெட்டி, ஜானகி ரவீந்திர ரெட்டி, நாகராஜ், பிரசாந்த்குமார், ஆனந்த் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் தட்சிணாமூர்த்தியும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 7 பேர் நீக்கப்பட்டுள்ளனர். கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் 7 பேரும் நீக்கப்படுவதாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

Tags : SR Sampangi ,AIADMK ,Sasikala , AIADMK
× RELATED சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில்...