3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மக்களவையில் திமுக கோரிக்கை

டெல்லி: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மக்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக அடிப்படையிலேயே விவசாயிகள் நலனுக்கான கட்சி என்று திமுக எம்.பி டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார். விவசாயிகள் 74 நாட்களாக வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்திய 8 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் 12 பேரை கைது செய்து சிறையில் அடைந்துள்ளது அரசு. கடந்த 4 ஆண்டுகளாக மாநிலங்களிடை மன்ற கூட்டம் இந்த அரசால் நடத்தப்படவில்லை என்று டி.ஆர் பாலு குற்றம்சாட்டியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரை 2 ஆக பிரித்தது குறித்து மாநிலங்களிடை மன்றத்தில் விவாதித்திருக்க வேண்டும் என்று டி.ஆர்.பாலு குறிப்பிட்டுள்ளார். பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் என்ன? என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். மாநில அதிகாரத்துக்கு உட்பட்ட கல்வித் துறையை மத்திய அரசு அபகரிக்க முயல்கிறது என்றும் கூறியுள்ளார். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் மத்திய அரசு தலையிடுவதாக டி.ஆர்.பாலு குற்றச்சாட்டு கூறியுள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ள போதிலும் பெட்ரோல் விலையை உயர்த்துவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார்.

Related Stories:

>