ஊட்டி அருகே விமானப்படை அதிகாரி அணையில் மூழ்கி சாவு: மகளை மீட்க சென்ற போது சோகம்

மஞ்சூர்: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் துர்லாப பட்டாச்சாரியா (38). விமானப்படையில் விங் கமாண்டராக பணியாற்றிய இவருக்கு அனுராதா என்ற மனைவியும், அத்விகா (8) என்ற மகளும், அதர்வா (4) என்ற மகனும் உள்ளனர். இவர் பயிற்சிக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமிற்கு வந்துள்ளார். நேற்று இவர் தனது குடும்பத்துடன் மஞ்சூர் அருகே உள்ள எமரால்டு பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார். இவருடன் பணிபுரியும் நண்பர்கள் சிலரும் நேற்று குடும்பத்துடன் எமரால்டினை சுற்றி பார்த்து விட்டு, அணைக்கட்டு பகுதிக்கு சென்றனர்.

அப்போது கரையில் விளையாடி கொண்டிருந்த பட்டாச்சாரியாவின் மகள் அத்விகா எதிர்பாராதவிதமாக எமரால்டு அணையில் தவறி விழுந்து மூழ்கினார். இதை கண்டு பதறிய பட்டாச்சாரியா மற்றும் அவரது நண்பர்கள் அணையில் இறங்கி குழந்தையை காப்பாற்ற முயன்றனர். குழந்தையை மீட்டு அனைவரும் கரைக்கு திரும்பிய நிலையில் பட்டாச்சாரியா மட்டும் கரை திரும்பவில்லை.

தகவலறிந்த எமரால்டு எஸ்.ஐ. கார்த்திக் தலைமையில் போலீசார் இறங்கி ஒரு மணி நேரம் தேடுதலுக்கு பின் சேற்றில் சிக்கியிருந்த பட்டாச்சாரியாவின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Related Stories:

>