சேத்தியாத்தோப்பு அருகே தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதால் வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டர் தீப்பற்றி எரிந்தது

சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஆயிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (50), விவசாயி. இவர் நேற்று கால்நடைகளுக்கு வேறு ஒருவருடைய வயலில் உள்ள வைக்கோலை விலைக்கு வாங்கியுள்ளார். பின்னர் அதனை டிராக்டரில் ஏற்றிக்கொண்டு ஆயிப்பேட்டை கிராமத்தில் உள்ள மற்றொரு தெருவிற்கு, சென்று கொண்டிருந்தார். அப்போது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியதில் டிராக்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் செந்தில்குமார் கீழே குதித்து உயிர் தப்பினார்.

உடனடியாக ஆயிப்பேட்டை கிராம மக்கள் ஒன்று திரண்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சேத்தியாத்தோப்பு தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் மற்றும் வீரர்கள் விரைவாக வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்து குறித்து ஒரத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.இது குறித்து கிராமமக்கள் கூறும்போது, தெருவில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் பலமுறை இதுபோல் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்குநேரில் பலமுறை எழுத்துபூர்வமாக தெரிவித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயரமானமின்கம்பங்கள் அமைத்து மாற்றி அமைத்திடவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>